Tamil - Board Application Form
பிரிவு 1 / பொதுவான கேள்விகள்(General question)
இன்டர்செக்ட் மற்றும் கார்டானோவுடன் உங்களையும் உங்கள் பின்னணியையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கார்டானோ /இன்டர்செக்ட் (cardano/intersect) தவிர வேறு அமைப்புகளோடு அல்லது குழுக்களோடு இணைந்திருக்கிறீர்களா , உங்கள் தனிப்பட்ட நலன் அல்லது நிறுவன நலன் நீங்கள் இருக்கும் இணைப்பின் முடிவுகளால் பாதிப்படைகிறதா , உங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதா, இணைப்புகளின் குழு உறுப்பினராக அனுபவம் இருக்கிறதா என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும்
சுயவிவரம்(Bio)
இன்டர்செக்ட் மற்றும் கார்டானோவில் (Intersect and Cardano ) உங்கள் அனுபவம் என்ன?
நீங்கள் ஒரு தனிநபராகவோ அல்லது உங்களுக்கு தொடர்புடைய நிறுவனமாகவோ கார்டானோ இணைப்புகளுடன் கருத்து மோதல்கள்/ கருத்து வேறுபாடுகள் வைத்துள்ளீர்களா?
நீங்கள் தற்போது ஏதேனும் இன்டர்செக்ட் அல்லது கார்டானோ நிதி உதவி பெற்றிருக்கிறீர்களா அல்லது முன்பு பெற்றிருக்கிறீர்களா (Catalyst போன்றவை)
நிர்வாக உறுப்பினராக அல்லது அது சம்பந்தமாக உங்களுக்கு அனுபவம் உள்ளதா?
பிரிவு 2 / இன்டர்செக்ட்(Intersect)
இன்டர்செக்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள், உறுப்பினர்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுவீர்கள், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை எவ்வாறு ஆதரிப்பீர்கள் என்பது பற்றிய உங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்டர்செக்டிற்கான முக்கிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நிர்வாக உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உறுப்பினர்களுடன் எவ்வாறு ஈடுபடுவீர்கள்?
இணைப்பிற்குள், நிர்வாகத்திலும் இன்டர்செக்ட் உறுப்பினர்களிடையேயும், பன்முகத்தன்மை கொண்ட மற்றும் சமமான சூழலை நீங்கள் எவ்வாறு வழங்குவீர்கள் என்பதை விளக்குங்கள்?
பிரிவு 3 / கார்டானோ (Cardano)
உங்கள் Blockchain/web3 அனுபவம், கார்டானோ நிர்வாகத்தில் இன்டர்செக்டின் பங்கு குறித்த உங்கள் பார்வை மற்றும் சமூகத்திற்குள் உள்ள சவால்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என்பதைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.
web3/blockchain இல் உங்கள் பொதுவான அனுபவம் என்ன?
கார்டானோவின் நிர்வாகத்தில் இன்டர்செக்ட் ஒரு துணைப் பாத்திரத்தை வகிப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? மேலும், ஏதேனும் இருந்தால், இன்டர்செக்டில் கார்டானோவின் நிர்வாகம் என்ன பங்கைக் கொண்டுள்ளது?
கார்டானோ சமூகத்திற்குள் நீங்கள் கவனித்த சில முக்கிய பதட்டங்கள் அல்லது சவால்கள் என்ன, இவை இன்டர்செக்டை பாதித்தால், இன்டர்செக்டை ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்த நீங்கள் எவ்வாறு முன்மொழிவீர்கள்?
பிரிவு 4 / நிர்வாகக்குழு(Board)
கருத்து வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு அணுகுவீர்கள், சமூக உள்ளீட்டோடு நிர்வாகத்தின் மேற்பார்வையை எவ்வாறு சமநிலைப்படுத்துவீர்கள், மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் ஆக்கப்பூர்வமாக எவ்வாறு செயல்படுவீர்கள் என்பதை விளக்குங்கள்.
ஒரு நிர்வாக அமைப்பிற்குள் கருத்து வேறுபாடுகள் அல்லது மாறுபட்ட கருத்துக்களை நீங்கள் எவ்வாறு அணுகுவீர்கள்?
பரவலாக்கப்பட்ட சமூக உள்ளீட்டோடு பாரம்பரிய நிர்வாக மேற்பார்வையை சமநிலைப்படுத்துவதில் உங்கள் தத்துவம் என்ன?
பிரிவு 5 / உறுப்பினர்களுக்கான கடிதம் (Letter to Members)
நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், இன்டர்செக்ட் மற்றும் கார்டானோ மீதான உங்கள் உறுதிப்பாடுகள் மற்றும் ஒரு நிர்வாக உறுப்பினராக உங்கள் இலக்குகள்பற்றி உறுப்பினர்களிடம் நேரடியாகப் பேசுங்கள்.
நீங்கள் ஏன் நிர்வாகத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
இன்டர்செக்ட் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான உங்கள் உறுதிப்பாடுகளையும், கார்டானோ மற்றும் அதன் சமூகத்திற்கான உங்கள் உறுதிப்பாடுகளையும் விவரிக்கவும்.
ஒரு நிர்வாக உறுப்பினராக நீங்கள் செயல்பட விரும்பும் சில இலக்குகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Last updated
Was this helpful?